Retirement living allowances and New Year gifts for old artists at Temple House!

The Prime Minister Dinesh Gunawardena said that remedies will be taken to cope with difficulties faced by elderly artistes. He made these comments while participating in the ceremony held at Temple Trees (08.04.2024) to enrol artistes who have newly applied for the retirement programme for aged artists that is implemented by the Tower Hall Theater Foundation, and presenting them gifts for the New Year. So far, a monthly retirement allowance of Rs.7,500/- has been given to 102 selected elderly artistes. The Board of Trustees of the Tower Hall Theater Foundation, which has met under the chairmanship of Prime Minister Dinesh Gunawardena, Chairman of the Tower Hall Theatre Foundation, has decided to increase the said allowance to Rs.10,000/-. Accordingly, from this month on, the Tower Hall Theater Foundation will provide a retirement allowance of Rs.10,000/- to 122 elderly artistes. Prime Minister who speaking at the event commented that, “It is a pleasure to meet you, who gave life to the culture and various art fields of this country, again. Your youth has expired with you. The Tower Hall Foundation pays you respect and we believe that in the future, it will be possible to improve further this process that was started with the hope of adding convenience to your life. The board of trustees discussed the financial hardships faced by the artists and decided to increase the retirement allowance to overcome those hardships to some extent. It is in the face of the current economic crisis. More struggling artists would be able to get enrolled in this retirement programme in the future. The artists of our country who have contributed the art in various fields have come from distant villages today. The Tower Hall Theater Foundation should be appreciated for their annual donation of goods required to celebrate the New Year for the said artists. The government respects you all again. Minister Vidura Wickramanayake, Secretary to the Prime Minister Anura Dissanayake, Secretary to the Ministry of Cultural Affairs Somaratne Vidanapathirana, Members of the Board of Trustees of Tower Hall Theater Foundation, Director General of Tower Hall Theater Foundation Dr. D. M. S. Dissanayake and a number of artists participated in this event. Prime Minister’s Media

වියපත් කලාකරුවන්ට විශ්‍රාමික ජීවනාධාර,අලුත් අවුරුදු තිළිණ ප්‍රදානය කිරීම අරලියගහ මන්දිරයේ දී !

ටවර් හෝල් රඟහල පදනම මඟින් ක්‍රියාත්මක කරනු ලබන වියපත් කලාකරුවන් සඳහා විශ්‍රාමික ජීවනාධාර ලබාදීමේ වැඩසටහන යටතේ කලාකරුවන්ට අලුත් අවුරුදු තිළිණ ප්‍රදානය කිරීම අරලියගහ මන්දිරයේ දී පසුගියදා (08) පැවැත්විණි. අග්‍රාමාත්‍ය දිනේෂ් ගුණවර්ධන සහ බුද්ධශාසන, ආගමික හා සංස්කෘතික කටයුතු අමාත්‍ය විදුර වික්‍රමනායක යන මහත්වරුගේ ප්‍රධානත්වයෙන් මෙම තිළිණ ප්‍රදානය කිරීම සිදු කෙරිණි. ඒ අනුව කලාකරුවන් 20 දෙනෙකු ඇතුළත් කර ගැනීමත්, දැනට මාසිකව රු. 7,500/- ක විශ්‍රාමික ජීවනාධාරය ලබන කලාකරුවන් 102 දෙනා ද ඇතුළුව සමස්ත කලාකරුවන් 122 දෙනා සඳහා අප්‍රේල් මස සිට රු. 7,500/- ක දීමනාව රු. 10,000/- දක්වා වැඩිකර ලබාදීම සහ අලුතින් බඳවා ගත් කලාකරුවන් සඳහා පත්වීම් ලිපි ද මෙහිදී ලබාදුණි. ජීවනාධාර හිමි කලාකරුවන්, අග්‍රාමාත්‍ය ලේකම් අනුර දිසානායක, බුද්ධ ශාසන, ආගමික හා සංස්කෘතික කටයුතු අමාත්‍යාංශය ලේකම් සෝමරත්න විදානපතිරණ, අමාත්‍යාංශය අතිරේක ලේකම් කේ.ඒ.ඩී.ආර්. නිශාන්ති ජයසිංහ, ටවර් හෝල් රඟහල පදනමේ අධ්‍යක්ෂ ජනරාල් ආචාර්ය ඩී.එම්.එස්. දිසානායක යන මහත්ම මහත්මිහු ,ටවර් හෝල් රඟහල පදනමේ භාරකාර මණ්ඩල සාමාජිකයන් , අමාත්‍යාංශ නිලධාරිහු හා අනුග්‍රාහක දායකත්වය ලබාදුන් ආයතනයන්හි නියෝජිතවරු ඇතුළු 300 කට ආසන්න පිරිසක් මෙම අවස්ථාවට සහභාගීවූහ.

வயதான கலைஞர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு விரைவில் தீர்வு... - பிரதமர் தினேஷ் குணவர்தன

டவர் மண்டப மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வயதான கலைஞர்களுக்கான ஓய்வூதிய வாழ்வாதார உதவித் திட்டத்திற்காக புதிதாக விண்ணப்பித்த கலைஞர்களை உள்வாங்குதல் மற்றும் அவர்களுக்கு புத்தாண்டு அன்பளிப்புகளை வழங்குவதற்காக நேற்று (2024.04.08) அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதுவரை தெரிவுசெய்யப்பட்ட வயதான கலைஞர்கள் 102 பேருக்கு மாதாந்த ஓய்வூதிய வாழ்வாதார உதவியாக ரூ.7,500/- வழங்கப்பட்டு வருகிறது. டவர் மண்டப மன்றத்தின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற டவர் மண்டப மன்ற நம்பிக்கையாளர் சபை, இந்த கொடுப்பனவை ரூபா 10,000/- ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, இம்மாதம் முதல் டவர் மண்டப மன்றத்தினால் வயதான 122 கலைஞர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகையாக ரூ.10,000/- வழங்கப்படவுள்ளது. இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் இந்நாட்டின் கலாசாரம் மற்றும் பல்வேறு கலைத் துறைகளை உயிர்பித்த உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடன் உங்களது இளமையும் போய்விட்டது. டவர் மண்டப மன்றம் உங்களை மதிக்கிறது மேலும் உங்கள் வாழ்வில் வசதியை சேர்க்கும் நம்பிக்கையுடன் தொடங்கப்பட்ட இந்த செயற்பாட்டை எங்களால் மேலும் முன்னேற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். கலைஞர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடிய நம்பிக்கையாளர் சபை, அந்த கஷ்டங்களை ஓரளவுக்கு போக்க ஓய்வுக்கால வாழ்வாதார உதவித்தொகையை அதிகரிக்க முடிவு செய்தது. இது தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையை கவனத்திற்கொண்டாகும். எதிர்காலத்தில், மேலும் வயதான பல கலைஞர்களை இந்த ஓய்வூதிய வாழ்வாதார உதவித் திட்டத்தில் சேர்த்துக்கொள்ள முடியும். பல்வேறு துறைகளில் கலையை உயிர்ப்பித்த எம் நாட்டின் கலைஞர்கள் இன்று தொலைதூர கிராமங்களில் இருந்து வருகைதந்துள்ளனர். டவர் மண்டப மன்றம் புத்தாண்டைக் கொண்டாடுவதற்குத் தேவையான பொருட்கள் உட்பட அன்பளிப்புகளை வழங்குவதற்கு ஆண்டுதோறும் எடுக்கும் முயற்சிகளை பாராட்ட வேண்டும். உங்கள் அனைவருக்கும் அரசாங்கத்தின் கௌரவத்தை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்வில், அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, டவர் மண்டப மன்ற நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், டவர் மண்டப மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி. எம். எஸ். திசாநாயக்க மற்றும் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். பிரதமர் ஊடகப் பிரிவு